பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி: இன்றும் நாளையும் நடைபெறுகிறது

சென்னை மதுரவாயலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 3 நாள்கள் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட நாய் வகைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சென்னை மதுரவாயலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற உயர் வகை நாய்கள்.
சென்னை மதுரவாயலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற உயர் வகை நாய்கள்.

சென்னை மதுரவாயலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 3 நாள்கள் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட நாய் வகைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சென்னையில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான ஜெர்மன் ஷெப்பர்டு, டாக் ஆஃப் இந்தியா, கிரேட்டன் டாக் கிளப் ஆஃப் இந்தியா, ராக்பெல்லர் டாக் கிளப் ஆஃப் இந்தியா ஆகிய கிளப்களின் சென்னை பிரிவு சார்பில் நடைபெறும் நாய்களின் சிறப்புக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்டு, கிரேட்டன், ராக்பெல்லர், லாபர் டாக் உள்ளிட்ட நாய் வகைகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொரு வகையிலும் 150 முதல் 200 வரையிலான ஆண், பெண் நாய்கள் பங்கேற்றுள்ளன.
இதுதொடர்பாக ஜெர்மன் ஷெப்பர்டு கிளப் தமிழக பிரிவு நிர்வாகி கலா கிருஷ்ணா கூறியதாவது:
ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் காவல் துறை, வீட்டுக் காவல், திருடனைப் பிடித்தல், பார்வையற்றோருக்கு வழிகாட்டுதல், ஆடு, மாடுகள் மேய்த்தலுக்கு ஓட்டிச் செல்லுதல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
செல்லப் பிராணிகள் வளர்ப்போரை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 6 மாதம் முதல் 24 மாதங்கள் வரையிலான நாய்களின் வயதுக்கேற்ப போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், நாய்களின் திடகாத்திரமான உடல் அமைப்பு, நடை, ஓட்டம், பல் வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
விஜயகாந்த் மகன் பங்கேற்பு: இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான நாய்களுடன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். இதில் விலைமதிப்புமிக்க அவரது கிரேட்டன், டாபர் மேன் உள்ளிட்ட வகை நாய்களை கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தார். அதில் சில நாய்கள் பரிசுகளையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com