29 வகையான காய்ச்சல்களை கண்டறிய முடியும்: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் 29 வகையான காய்ச்சல்களை கண்டறியும் வசதி உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
29 வகையான காய்ச்சல்களை கண்டறிய முடியும்: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் 29 வகையான காய்ச்சல்களை கண்டறியும் வசதி உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
 தமிழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய்களைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் போதுமான வசதிகள் உள்ளன. சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலையத்தில் 29 வகையான காய்ச்சல்களைக் கண்டறியும் வசதி உள்ளது. எனவே, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றார் அவர்.

 சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:

 தமிழகத்தில் இதுவரை 1,751 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் டெங்குவினால் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்போடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைப் பரிசோதித்து அவர்கள் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும். மர்மக் காய்ச்சல் என்றோ, சாதாரணக் காய்ச்சல் என்றோ தெரிவிக்கக் கூடாது. தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு புகை மூலம் கொசு மருந்து அடிப்பது மிகவும் அவசியமாகும். இந்தப் பணிகளுக்காக 9,682 கொசு மருந்து அடிக்கும் கருவிகள், 253 கொசு மருந்து வாகனங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வெளியில் விளையாடச் செல்லும்போது முழு கால்சட்டை மற்றும் முழு கை சட்டைகளை அணியச் செய்ய வேண்டும்.

 காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவத்தில் ஈடுபடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com