"நோய் தடுப்பு மருந்துகளைக் கையாளுவதில் கூடுதல் கவனம் அவசியம்'

நோய் தடுப்பு மருந்துகளைக் கையாளும்போது மருத்துவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுவது அவசியம் என்று நெஞ்சக நோய் மருத்துவர் அசோக் மகாசூர் கூறினார்.
"நோய் தடுப்பு மருந்துகளைக் கையாளுவதில் கூடுதல் கவனம் அவசியம்'

நோய் தடுப்பு மருந்துகளைக் கையாளும்போது மருத்துவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுவது அவசியம் என்று நெஞ்சக நோய் மருத்துவர் அசோக் மகாசூர் கூறினார்.

 குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற மூத்த மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கே.வி.திருவேங்கடம் சொற்பொழிவு நிகழ்ச்சியில், அசோக் மகாசூர் மேலும்
 பேசியது:-

 நோயின் தாக்கத்தைக் குறைத்து விரைவில் குணமாக்க வீரியமுள்ள நுண்ணுயிர்கொல்லி (ஆண்டிபயாடிக்) மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்துவது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

 நுண்ணுயிரிகளால் (வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களுக்கும், நுண்ணுயிர்க் கிருமிகளால் (பாக்டீரியா) பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை முறைகளில் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக மருந்துகளை பயன்படுத்துகின்றனர். சிலர் இரு நுண்ணுயிர்கொல்லி மருந்துகளைச் சேர்த்து கூட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தியாவில் மருந்து விற்பனைக் கடைகளில் உள்ள மருந்தாளுநர்களிடம் சிகிச்சை பெற்று வரும் நிலையும் அதிகரித்துள்ளது.

 உலகில் அதிக நுண்ணுயிர்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தையும், சீனா 2-ஆவது இடத்தையும் வகிக்கின்றன. இரு நாடுகளிலும் நோய் தடுப்பு மருந்துகள் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதால் இரு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை இறப்பு நேரிடுகிறது.

 1928-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 1940-இல் உலகில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட முதல் நுண்ணுயிர்கொல்லி மருந்து பெனிசிலினுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருந்தாலும், கடந்த 6 வருடங்களாக புதிய நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

 உலகெங்கும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் அதிகரிக்கும் பல்வேறு வைரஸ் தாக்குதல் காரணமாக, மக்கள் நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

 நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், செப்டம்பரில்தான் நோய்தடுப்பு மருந்துகள் விற்பனை அதிகரிக்கும் மாதம் என்று தெரிய வந்துள்ளது.

 உலக அளவில் 2010-ஆம் ஆண்டுப்பின் புதிதாக நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பெருங்குறை. புதிய நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்புக்கு ஆய்வு நடவடிக்கை அதிகரிக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், கே.வி.திருவேங்கடம் பேசியதாவது:-

 நோயாளிகளை பரிசோதித்து, மருத்துவ அறிவாற்றலை மேம்படுத்தாமல் நவீன மருத்துவக் கருவிகள், உபகரணங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் போக்கு மருத்துவர்களுக்கு அதிகரித்துள்ளது. நோயின் தாக்கம் அறிந்து பக்கவிளைவுகள் இல்லாத உரிய மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் கேட்டறிந்து விளக்கம் பெறுவதில் தயங்கக் கூடாது என்றார்.

 கல்வி ஆலோசகர் வீரபாகு, கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகர், துணை முதல்வர் சாய்குமார், பேராசிரியர்கள் பழனி ஆண்டவர், ராமச்சந்திரன், பத்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com