பொது விநியோக திட்டத்தில் குறை இருந்தால் புகார் அளிக்கலாம்

பொது விநியோக திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் பொது மக்கள் புகார் கூறு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: பொது விநியோக திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் பொது மக்கள் புகார் கூறு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடைபெற்றது.

அப்போது, பொதுவிநியோக திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் 044-28592828 என்ற எண்ணுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் 9445190660, 9445190661, 9445190662 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொருள்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகின்றனவா என்று கண்டறிய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, இதுவரை 625 முழுநேர நியாயவிலை அங்காடிகளும், 1381 பகுதி நேர அங்காடிகளும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com