விவசாயிகளுக்கு ரூ.1,345 கோடி பயிர்க் கடன்

தமிழகத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,345 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.1,345 கோடி பயிர்க் கடன்

தமிழகத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,345 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் அந்தத் துறையின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியது:-

தமிழகத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ், ரூ.5,780.92 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழ்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டில், இதுவரையில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 706 விவசாயிகளுக்கு ரூ.1,345.33 கோடி அளவுக்கு பயிர்க் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ரூ.56.12 கோடி அளவுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், அம்மா-கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.403.73 கோடி மதிப்பில் மருந்துகள் விற்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com