தலாக் விவகாரத்தில் பாலின சமத்துவ அடிப்படையில் நடவடிக்கை அவசியம்: இந்திய கம்யூ. தேசியச் செயலர்

தலாக் விவகாரத்தில் பெண்கள் பாலின சமத்துவ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் ஷமிம் ஃபைசி தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ஷமிம் ஃபைசி. உடன் கட்சி நிர்வாகிகள்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ஷமிம் ஃபைசி. உடன் கட்சி நிர்வாகிகள்.

தலாக் விவகாரத்தில் பெண்கள் பாலின சமத்துவ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் ஷமிம் ஃபைசி தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.
மோடி அரசின் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி மதவாத, சாதியவாதத்துக்கு எதிரான நாளாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.
நவம்பர் 7-ஆம் தேதி ரஷிய புரட்சி நிகழ்ந்த 70-ஆம் ஆண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதுடன், மார்க்சிய கொள்கைகளின் தாக்கம் 21-ஆம் நூற்றாண்டில் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆராயப்படும்.
பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக மோடி அரசு வகுப்புவாதத்தைப் பரப்பும் செயலில் இறங்கி உள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டு 5 மாநில தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும்.
தலாக் விவகாரம்: தலாக் விவகாரத்தில் பெண்கள் பாலின சமத்துவ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த பிரச்னையில் பாலின சமத்துவம்தான் முக்கியமானது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் கேள்வித்தாளை விநியோகம் செய்துள்ளது. முதலில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மதங்களில் நிலவும் பழக்க வழக்கங்கள் தொடர்பாக கருத்தறிய வேண்டும். அவற்றுக்குத் தீர்வு கண்டபிறகு பொதுசிவில் சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தறியலாம் என்றார் ஃபைசி.
உடனிருந்த, கட்சியின் மாநிலச் செயலர் விஸ்வநாதன் கூறியதாவது:
நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில், தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com