போலி மருத்துவர்கள் 4 பேர் கைது: 30 கிளினிக்குகளுக்கு "சீல்'

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வில், 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 30 கிளினிக்குகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வில், 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 30 கிளினிக்குகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய் துறையினர், காவல் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், சூளகிரி ஒன்றியத்தில் 8 கிராமங்களில் செயல்பட்டுவந்த போலி கிளினிக்குகளுக்கு "சீல்' வைக்கப்பட்டன. இதில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்த கீதா சுரேஷ், காருபால கிராமத்தில் லட்சுமணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல, ஊத்தங்கரை ஒன்றியம், கல்லாவியில் கிளினிக் நடத்தி வந்த சாமிக்கண்ணு, மத்தூர் ஒன்றியம், சிவம்பட்டி கிராமத்தில் கிளினிக் நடத்திவந்த சரவணன் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதன்படி, 67 இடங்களில் நடைபெற்ற ஆய்வில், 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 30 கிளினிக்குகளுக்கு "சீல்' வைக்கப்பட்டதாக சுகாதார நலப் பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com