மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம்: தமிழக அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்க வேண்டும்
மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம்: தமிழக அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளைக் கேட்பதற்கான 64 -ஆவது மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (அக்.25) நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற 63 -ஆவது கூட்டத்தில் பிற மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு, தங்கள் மாநிலத்தின் சார்பில் கருத்துகளைக் கூறினர்.
ஆனால், தமிழகத்தின் சார்பில் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவம், இட ஒதுக்கீடு, தமிழ் மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம், சிறுபான்மையினர் நலன் என்று ஒட்டுமொத்த நலனைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். இதற்கு, நடைபெறவுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக வெற்றிபெறும்: வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
அதிமுக ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது என்ன மாதிரியான நிலைமை இருந்ததோ, அதைவிட மோசமான நிலைமை இன்றைக்குத் தமிழகத்தில் உள்ளது. அடிப்படை பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. சட்டம் - ஒழுங்கு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இதையெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துச் சொல்வோம். 3 தொகுதிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றால் திமுகதான் வெற்றிபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com