விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்!

அங்கீகாரமில்லாமல் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்றால், அவற்றை பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம்
விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்!

அங்கீகாரமில்லாமல் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்றால், அவற்றை பதிவு செய்யக் கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில்தொடர்ந்த பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு செப்டம்பர் 9-இல் விசாரித்தபோது, "விளைநிலங்களை வீட்டு மனைகளாக "லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எவ்வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியதோடு,பத்திரப்பதிவுகள் குறைந்துள்ளன என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் வழக்குரைஞர் விபிஆர் மேனன் என்பவரும், இந்த விவகாரத்தில் விரிவான கொள்கை ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்று கோரி மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மூன்று மனுக்களும் இணைக்கப்பட்டு, தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த உத்தரவை நீக்கக்கோரி 11 அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.
அதன் பின்னர் நடந்த விவாதத் தைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியது: கடத்தல் வியாபாரத்தால் பல கோடி வருவாய் கிடைக்கும் என்பதற்காக, அவற்றை அனுமதிக்க முடியுமா?. மேலும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். மேலும் நிர்பந்திக்க வைக்கும் யுக்திகளை பயன்படுத்த வேண்டாம். இந்த விவகாரத்தில், அரசும், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பும் விவாதித்து நிலங்களை வகைப்படுத்தி, ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அவ்வாறு அந்த கொள்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் தான், தடை உத்தரவில் மாற்றம் செய்வது குறித்தோ அல்லது நீக்குவது குறித்தோ பரிசீலிக்க முடியும் என்றனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 16-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, அங்கீகாரமற்ற நிலங்களைப் பதிவு செய்வதை தடை செய்யும், தமிழ்நாடு பதிவுச் சட்டத் திருத்தத்தை அறிவிப்பாணையாக வெளியிட்டு, அக்டோபர் 20-இல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com