அரசியல் ஆதாயத்துக்காக கூட்டப்பட்ட கூட்டமல்ல: மு.க. ஸ்டாலின்

அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் ஆதாயத்துக்காக கூட்டப்பட்ட கூட்டமல்ல என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


சென்னை: அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் ஆதாயத்துக்காக கூட்டப்பட்ட கூட்டமல்ல என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்.

அப்போது அவர் பேசுகையில், காவிரி விவகாரம் தொடர்புடைய தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி இன்றைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் நகலை, தமிழக அரசு, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் புது தில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து காவிரி பிரச்னையை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, இதை நிறைவேற்ற அரசு முன் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை இதே போன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை மீண்டும் கூட்டி அந்த கூட்டத்தில் காவிரி பிரச்னை குறித்து விவாதித்து எந்த அளவில் போராட்டத்தை நாம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, பாரபட்சம் இன்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்பு, அதிமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியபோது திமுக சார்பில் திருச்சி சிவாவை கருணாநிதி அனுப்பிவைத்தார்.

ஆனால், இப்போது திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. இது ஏன் என்று அவர்களிடம் கேட்டு பதிலைப் பெறுங்கள் என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.

இது அரசியல் ஆதாயத்துக்காக கூட்டப்பட்ட கூட்டம் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும் இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருந்திருந்தால் ஐந்து சதவீதத்துக்கு மேல் இங்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்றார் அவர்.

மேலும், அவர் பேசுகையில், தமிழக ஊடகங்கள் சில தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். கர்நாடக அரசியல் தலைவர்கள், விவசாயிளுக்கு மட்டும் அல்ல அங்கிருக்கும் ஊடகங்களுக்கு இருக்கும் அந்த உணர்வு தமிழக ஊடகங்களுக்கும் வர வேண்டும் என்று பேசினார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com