எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்யுங்கள்: நாராயணசாமிக்கு ஆதரவாக பொன்முடி பிரசாரம்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்யும் வகையில் முதல்வர் நாராயணசாமி வெற்றிக்கு பாடுபடுவோம் என தமிழக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்யும் வகையில் முதல்வர் நாராயணசாமி வெற்றிக்கு பாடுபடுவோம் என தமிழக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமி 5-வது நாளாக பெரியார் நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக டாக்டர் பொன்முடி வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது திமுக எம்.எல்.ஏ. இரா. சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் முதல்வர் நாராயணசாமிக்கு பிரசாரம் செய்தோம். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு நாராயணசாமி மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு தோழமை கட்சியான நாங்களும் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியது:

தமிழக-புதுச்சேரி விவசாயிகள் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. அரசியல் காரணமாக பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்ட தீர்ப்பை மதிக்காத அரசாக மத்திய அரசு, கர்நாடக அரசுகள் உள்ளன.

தமிழக எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சிகள் கூட்டத்தில், எல்லா கட்சிகளும் மாநில விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து பங்கேற்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் மத்திய அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

அரசியல்கட்சிகள் தங்களது கருத்து வேறுபாடுகளால் காவிரிநீர் பிரச்சினையில் ஒன்றாக இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com