அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் து.மூர்த்தி மறைவு: ராமதாஸ் இரங்கல்!

உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத் தலைவரும், தமிழ் அறிஞருமான....

உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத் தலைவரும், தமிழ் அறிஞருமான பேராசிரியர் து.மூர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அலிகார் நகரில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தமிழ் அறிஞரான து.மூர்த்தி பெரும் போராளியும் கூட. அவர் எத்தகைய போராளி என்பதற்கு  அவரது பணி வரலாறே சாட்சி.  முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய மூர்த்தி, நேர்மையாகவும், நெஞ்சுரத்துடனும் பணியாற்றிய ஒரே காரணத்திற்காக இரு நிறுவனங்களிலும் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொண்ட மூர்த்தி தமது இறுதி மூச்சு வரை அங்கு பணியாற்றினார்.

தூய தமிழ் சொற்களை அறிமுகம் செய்தார். தமிழ் மற்றும் சமூக நீதி குறித்த கட்டுரைகளை தினப்புரட்சியில் எழுதியுள்ளார். நான் தில்லிக்கு சென்றாலும், அவர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் என்னை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். பேராசிரியர் மூர்த்தியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்.

பேராசிரியர் து.மூர்த்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு, தமிழறிஞர்களுக்கும், தமிழ் தேசியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்படுவதற்கு முன் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பா.ம.க நிர்வாகிகள்  மரியாதை செலுத்துவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com