புரியாத புதிராக விளங்கும் 'கியான்டு'ம் மழை தொடர்பான புரளிகளும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், மழை தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
புரியாத புதிராக விளங்கும் 'கியான்டு'ம் மழை தொடர்பான புரளிகளும்


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், மழை தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனால், தமிழகத்துக்கு அக்டோபர் 28ம் தேதி மழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, பர்மா நோக்கி சென்று கொண்டிருந்த கியான்ட் புயல் திடீரென யு டர்ன் எடுத்து தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இந்த புயலால் தற்போது வரை தமிழகத்துக்கு எந்த அபாயமும் இல்லை.

ஆனால், தீபாவளிக்குப் பிறகு, இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகருமா என்பது குறித்து எந்த திட்டவட்டமான அறிகுறியும் இல்லை. இந்த புயலின் பாதையை கணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இன்னும் சில நாட்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், 28ம் தேதி சென்னைக்கு இதனால் மழை பெய்யும் என்ற தகவல் உண்மையில்லை.

தமிழகத்தில் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதிக்குள் பருவ மழை தொடங்கிவிடும் என்று உறுதியாகக் கூற முடியும்.
இந்த தீபாவளி தமிழகத்தில் மழை குறுக்கீடு இல்லாத தீபாவளியாகவே அமையும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com