கோயில்கள், அரண்மனை தொடர்பாக பிரெஞ்ச் இன்ஸ்ட்டியூட் ஆய்வு:பிரி்ட்டிஷ் நூலகம் ரூ.35 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் உள்ள 9 கோயில்கள், ஒரு அரண்மையில் உள்ள பழங்கால ஓவியங்கள் தொடர்பாக புதுச்சேரி....

புதுச்சேரி: தமிழகத்தில் உள்ள 9 கோயில்கள், ஒரு அரண்மையில் உள்ள பழங்கால ஓவியங்கள் தொடர்பாக புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் ஆய்வு மேற்கொள்கிறது. இதற்காக பிரிட்டிஷ் நூலகம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்ட்டியூட்டின் புதிய இயக்குநராக பேராசிரியர் பிரெட்ரிக் லேண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது பிரெஞ்ச் இன்ஸ்ட்டியூட் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளேன். இதற்கு முன்பு பாரீஸ் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் என்னை இப்பணிக்கு அனுப்பி உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு சிறந்த பெயர் உள்ளது. புதுச்சேரி நீங்கலாக இந்திய அளவில் இதன் பணி பாராட்டப்பட்டு வருகிறது. பிரெஞ்சு வெளியுறவுத்துறை நிதியுதவி செய்யும் 27 நிறுவனங்களில் இது பெரிய நிறுவனமாகும்.

4 துறைகள் உள்ளன. சமூக அறிவியல், நிதி, வேளாண்மை, வாக்காளர், நகர்ப்புற பிரச்னைகள், சுற்றுச்சூழல் துறை, காடுகள், மேற்கு தொடர்ச்சி மலை காடுகள், பழங்கால படிமங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உள்ளன.

மேலும் வரலாற்று ஆய்வுகள், சம்ஸ்கிருதம், தமிழ் மொழிகள், ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை யுனெஸ்கோ புராதான நினைவுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது.

மேலும் புகைப்படங்கள் நூலகமும் உள்ளது. கோயில்கள், சிலைகள் தொடர்பாக புகைப்படங்கள் உள்ளன. இவை சிலை கடத்தல் விசாரணைகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலைகள் எங்கள் நிறுவன உதவியால் மீட்கப்பட்டன.

ஜியோமெட்டிக்ஸ் துறை மூலம் தொலையுணர்வு, காடுகள் வரைபடம், அதன் பெருக்கம், குறித்து ரிமோட் சென்சிங் முறையில் ஆராயப்படுகிறது.
வருங்கால திட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சித் திட்டங்கள் விரைவபடுத்தப்படும்.

சமூக அறிவியல் துறையில் கிராமப்புற மக்கள் குடிபெயர்தல், போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் இன்டாலஜி துறையில் பிரிட்டிஷ் நூலக நிதியுதவியுடன், தமிழகத்தில் உள்ள 9 கோயில்கள், ஒரு அரண்மையில் பழங்கால ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரூ.35 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் இனஸ்ட்டியூட் மூலம் அசாமில் வனத்துறையுடன் இணைந்து மேம்பாட்டுப் பணிகளை விரைவில் மேற்கொள்ளகிறது. இதற்காக பிரான்ஸ் அரசு நிதி ஒதுக்கி உள்ளது என்றார் லேண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com