புதுவை அரசியலில் திடீர் திருப்பம்: மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவை கோரிய காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்

புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கோரியுள்ளார்.

புதுச்சேரி: புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கோரியுள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடவில்லை. நெல்லித்தோப்பு தொகுதி தொடர்பாக கூட்டணி நிர்வாகிகள் முடிவு செய்வர் என ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

திடீர் திருப்பம்
இந்நிலையில் புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக இடதுசாரிகள் தலைவர்களை சந்தித்து நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நாராயணசாமிக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் கடிதம் கொடுத்தது ரரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக நாராயணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மக்கள் நல கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர்களை அவர்களது அலுவலகத்திற்கு சென்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், மக்கள் நலன் கருதியும் மாநில வளர்ச்சிக்காகவும் இடதுசாரிகள், விடுதலைசிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கேட்டதாக தெரிவித்தார்.

பின்னர் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் கூறுகையில்: எங்களது கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி எங்களது நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்போம் என்றார்.

புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக மக்கள் நல கூட்டணியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதரவு கேட்ட சம்பவம், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com