ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்...

தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256151-ல் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்...


திருவள்ளூர்: தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256151-ல் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள நீதிமன்ற உத்திரவினை அமுல்படுத்தும் பொருட்டு, சென்னை போக்குவரத்து ஆணையரால் சிறப்பு தணிக்கை குழு, வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் இயக்கூர்தி ஆய்வாளர்களை கொண்டு அமைக்கப்பட்டு சிறப்பு தணிக்கை செய்யப்படுகிறது.

இக்குழு 26 முதல் 31 வரை ஆம்னி பேருந்துகள் வாகன தணிக்கை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டினை விட அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டால் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

இது தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் : 18004256151-ல் பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com