கண்ணைக் கவரும் வகையில் சேலைகள்:கைத்தறி கண்காட்சியில் அறிமுகம்

தேசிய கைத்தறி கண்காட்சியில் கண்ணைக் கவரும் வகையில், புதிய ரகங்களில் பட்டுச் சேலைகள், இயற்கைச் சாய சேலைகள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன.

தேசிய கைத்தறி கண்காட்சியில் கண்ணைக் கவரும் வகையில், புதிய ரகங்களில் பட்டுச் சேலைகள், இயற்கைச் சாய சேலைகள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, சென்னை நும்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அன்னை தெரசா மகளிர் மேம்பாட்டு மைய வளாகத்தில் அக். 29-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 முதல் இரவு 8 வரை இந்தக் நடைபெறுகிறது. இங்கு 30 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கைத்தறி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உத்தராட்சம் வடிவமைப்பு, செட்டிநாட்டு மோட்ட ரகம், கூரைநாடு சேலைகள், கோடாலி சேலைகள் போன்ற கைத்தறி சேலைகளும், காய்கறிகள் இயற்கை சாயத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளன. கார்ட்டூன் வடிவங்களில் தலையணை உறைகள், ஜமுக்காளம், இரவு உடைகள் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பருத்தி சேலைகள், திருபுவனம், ஆரணி, காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், பட்டு வேஷ்டிகள், மென் பட்டுச் சேலைகள், ஜமுக்காளம், தலையணை உரைகள், படுக்கை விரிப்புகள், கைலிகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், நவீன ரக உடைகள் என பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் 3.20 கோடிக்கு துணிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டுக்கு ரூ.4.30 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com