கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விரைந்து பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விரைந்து பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த விவசாயிகள் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்கத்தினரிடம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சர்க்கரை ஆணையர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 5 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு, உரிய விலை தர மறுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் தீபாவளியை நல்லபடியாக விவசாயிகள் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். தீபாவளி முடிந்த பிறகு, சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம் பேசி, நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்தனர். இதுதவிர, மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்த விலையை தர மறுக்கும் ஆலைகள் மீது, சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com