தயார் நிலையில் 811 ஆம்புலன்ஸ்கள்

தீபாவளி சமயத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களைக் எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் 811 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

தீபாவளி சமயத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களைக் எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் 811 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அக்டோபர் 28 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் 29 -ஆம் தேதி இரவு 8 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர் நல ஆணையத்தில் 3 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்ட முடிவை தாற்காலிகமாக கைவிடுவதாக ஊழியர்கள் வியாழக்கிழமை இரவு அறிவித்தனர்.
இந்த நிலையில், தீபாவளி தினத்தன்று அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயங்கும் என்று 108 சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளி சமயத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகமானோர் பயணிக்க உள்ளதால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டுகளில் அதிக அவசரகால அழைப்புகள் பெறப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 811 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 108 சேவையின் மையக் கட்டுப்பாட்டு அறையிலும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அவசர உதவிக்காக பொதுமக்கள், தமிழக அரசின் 108 சேவையையும், மருத்துவ ஆலோசனைகளுக்கு 104 சேவையையும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com