தீபாவளி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளியையொட்டி, ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளியையொட்டி, ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
மகிழ்ச்சி மற்றும் வளத்தின் ஒளியைக் குறிப்பதாகும் தீபாவளி. இந்த நன்னாள், அனைவரும் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கட்டும்.
தெய்வீக ஒளியானது மக்களின் மனதில் அறியாமை எனும் இருளை நீக்கி, அனைவருக்கும் வெற்றி, ஒற்றுமை, நல்ல உடல்நலம், வாழ்வில் முன்னேற்றத்தை அளிக்கட்டும். அனைவருக்கும் இதயம் கனிந்த பசுமை நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் என்றார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார். எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தை நாம் காணத் தொடங்கியுள்ளோம். நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் நம் திறமைகளை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பணிபுரிந்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்றுவது நம் தலையாய கடமையாக அமையட்டும். தீபாவளி நாளில் வரும் மாசுகளை உடனே அகற்றி, நம் வீட்டையும், நாட்டையும் தூய்மையானதாக உருவாக்குவோம்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்: உடல் நலமற்ற தலைவர்கள் உடல்நலம் பெறவும், சுயநலமற்றவர்கள் பொதுநலம் உடையவர்களாக மாறவும், தமிழர்கள் அனைவரும் பல நன்மைகள் பெற்று நலமாக வாழவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தீப ஒளி பரவட்டும். தீராத பிரச்னைகள் தீரட்டும்.
ஜி.கே.வாசன்: இருள் மறைந்து ஒளி பரவும் தீபாவளி முதல், தமிழகத்தின் தீராத பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும். நலிந்தோர் நலனுக்கான புதிய திட்டங்கள் வர வேண்டும். விவசாயிகள் வாழ்வு செழிக்க வேண்டும். தேன் தமிழ்போல் தமிழக மக்களின் வாழ்வு இனிக்கட்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: பாரத தேசத்து மக்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். இந்த நம்பிக்கையே இந்திய மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வைப் போற்றி நிற்கிறது. தீபாவளி பெருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மையும், உண்மையும், மென்மையும், மனிதநேயமும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com