குரூப் 4 தேர்வுக் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாளாகும்.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப, வரும் நவம்பர் 6 -ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
13 லட்சம் பேர்:

இந்த தேர்வில் பங்கேற்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு புதன்கிழமையுடன் (செப்.14) முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், விண்ணப்பித்தவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலமாக தேர்வுக் கட்டணமான ரூ.75-ஐ செலுத்த வேண்டுமென டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்திலேயே வெளியிடப்படும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com