சம்பா சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
சம்பா சாகுபடிக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு


தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்களும், 5 மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.
கல்லணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக காவிரி மற்றும் வெண்ணாற்றில்  தலா  3,600 கன அடி நீரும், கல்லணை கால்வாயில் 1000 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 800 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இத்தண்ணீர் கல்லணைக்கு நேற்று வந்து சேர்ந்தது.

இதையடுத்து, டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக இன்று காலை கல்லணை திறக்கப்பட்டது. கல்லணைக்கு வரும் தண்ணீரில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் பிரித்துவிடப்படும். இந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 3 அல்லது 5 நாள்களுக்குள் சென்றடையும் எனப் பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.25 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படவுள்ள சம்பா பருவ சாகுபடிக்கும், சுமார் 80,000 ஹெக்டேரில் தாளடி சாகுபடிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்மைத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com