"மருத்துவ உடலமைப்பியல் துறைக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு'

அதிகரித்து வரும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் காரணமாக, மருத்துவ உடலமைப்பு (அனாடமி) துறைக்குக் கூடுதல் மதிப்பு, முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்று சென்னை மருத்துவக் கல்லூரி
ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச உடற்கூறு இயல் மருத்துவக் கருத்தரங்க மலர் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) கருத்தரங்கச் செயலர் டபிள்யூ.எம்.எஸ்.ஜான்சன், கல்லூரி துணை முதல்வர் பி.சாய்க
ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச உடற்கூறு இயல் மருத்துவக் கருத்தரங்க மலர் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) கருத்தரங்கச் செயலர் டபிள்யூ.எம்.எஸ்.ஜான்சன், கல்லூரி துணை முதல்வர் பி.சாய்க

அதிகரித்து வரும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் காரணமாக, மருத்துவ உடலமைப்பு (அனாடமி) துறைக்குக் கூடுதல் மதிப்பு, முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறை இயக்குநர் சுதா சேஷய்யன் கூறினார்.

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம், 39-ஆவது தேசிய உடற்கூறு இயல் மருத்துவர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்து,அவர் மேலும் பேசியது:-

மருத்துவ சிகிச்சைத் துறைக்கு அடிப்படை, ஆணிவேராக உடற்கூறுவியல் துறை திகழ்ந்து வருகிறது. உயிரற்ற உடல் மூலம் உயிரோடு இருப்பவர்களின் நலன் காக்க உதவுகிறது.

மருத்துவக் கல்வி பயிலும்போது, உடலில் எந்தெந்த உள்உறுப்புகள், ரத்த நாளங்கள் எங்கு எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறியும் மருத்துவர்கள், உடற்கூறு தொடர்பாகப் புதிதாக எதைக் கற்றுக் கொள்வது என்று கருதக் கூடும்.
மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உடற்கூறுவியல் தொழில்நுட்பக் கல்வியும் வளர்ந்து விரிந்து,பெருகிக் கொண்டே இருக்கிறது.

நுண்துளை அறுவைச் சிகிச்சை, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை, இடுப்பு,மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட நவீன மிக சிறப்பு மருத்துவ அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும். மேலும், சி.டி., எம்.ஆர்.ஐ. ஆகிய நவீன நிழல் படங்கள் குறித்த மருத்துவ அறிவாற்றலை மேம்படுத்தவும், உடற்கூறுவியல் துறை தான் அடிப்படையாகவும்,ஆதாரமாகவும் திகழ்கிறது என்றார்.

கருத்தரங்கில் மூத்த உடற்கூறுவியல் மருத்துவர் எஸ்.ராமசாமி பேசியதாவது:-
மாணவர்கள் தங்களது மருத்துவ அறிவாற்றலைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 92 வயதைக் கடந்தும் படித்துகொண்டு தான் இருக்கிறேன். கடந்த ஆண்டு தான் எப்.ஆர்.சி.எஸ்.படிப்பை நிறைவு செய்தேன். ஆர்வம், ஊக்கம், நோக்கம் இருந்தால் எவ்வளவு வயதிலும் கற்றுகொள்ளலாம் என்றார்.

கருத்தரங்கில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கும் டாக்டர் லீலா கிருஷ்ணமூர்த்தி நினைவு விருதுகளை மூத்த உடற்கூறுவியல் மருத்துவப் பேராசிரியர்கள் எஸ்.ராமசாமி,ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com