நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி சி35 ராக்கெட்!

எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை விண்ணில் ஏவப்படுகிறது.
விண்ணில் செலுத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்.
விண்ணில் செலுத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்.

எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை 8.42 மணிக்குத் தொடங்கியது.
"ஸ்கேட்சாட்-1' உள்பட 3 இந்திய செயற்கைக்கோள்கள் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளால் செயற்கைக்கோள்களையும், வர்த்தக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்கா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர் உள்பட நாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் மூலம் 377 கிலோ எடை கொண்ட "ஸ்கேட்சாட்-1' என்ற செயற்கைக்கோளை விண்ணுக்குக் கொண்டு செல்கிறது. இது பூமியிலிருந்து 720 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
இதனால், பருவ காலம், பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மேலும், அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள், இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
இதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவது உள்பட பணிகள் நிறைவடைந்த சனிக்கிழமை 48 மணி நேரத்துக்கான கவுன்ட் டவுன் தொடங்கியது.
இந்த பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட் அதிநவீன எக்ஸ்எல் வகையில் 15 ஆவது ராக்கெட் ஆகும். ஒட்டுமொத்தமாக 37- ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும்.
சிறப்பு என்ன? "ஸ்காட்சாட் 1' செயற்கைக்கோள் துருவ - சூரிய சுற்றுவட்டப்பாதையிலும், மற்ற செயற்கைக்கோள்கள் துருவ சுற்றுவட்டப்பாதையிலும் நிலைநிறுத்தப்படுகின்றன.
இந்திய ராக்கெட் ஒன்று இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும்.
இரு சுற்றுவட்டப்பாதைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடமாகும். இது முக்கியவத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com