பொதுத்துறை நிறுவனங்களை முடக்கக் கூடாது: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை முடக்கக் கூடாது: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
17 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இதுபோலவே 22 பொதுத் துறை நிறுவனங்களில் அரசு பங்கு முதலீட்டினை 51 சதவிகிதத்திற்கும் கீழே குறைத்துக் கொள்ளப் போவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது பட்டியலில்தான், சேலம் உருக்காலை இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்திக்குப் பிறகு, சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்த்து, சேலம் உருக்காலைத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத்தைத் துவக்கியுள்ளார்கள்.
அதிர்ச்சி அளிக்கிறது: சேலத்தில் உருட்டாலையாகத் தொடங்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ் பெருக்கி நிற்கிறது. இங்கே கார்பன் மற்றும் சாதாரண ஸ்டீல், சுருள், நாணயவில்லை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு மட்டும், ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த அளவுக்கு வளர்ந்து வரும் சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உருக்காலையை லாப நோக்கில் செயல்படச் செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இங்கு 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை சேலத்தில் தொடங்கலாம். ஆக்கப்பூர்வமான இந்த முயற்சிகளை மேற்கொள்ள சிறிதும் கருதிப் பார்க்காமல், தனியாருக்குத் தாரை வார்த்திட முயற்சி செய்வது தகுந்த தீர்வாகாது.
முட்டுக்கட்டை போட வேண்டும்: தமிழக அதிமுக ஆட்சியினர், திமுக ஆட்சிக் காலத்தில், மத்திய காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டதாயிற்றே என்று எண்ணாமல், சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கின்ற முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். மத்திய பாஜக அரசும் தமிழகத்தின் நலன் கருதியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்த்தும், இந்தப் பொதுத் துறை நிறுவனத்தின் மீது கை வைக்காமல் இருக்க வேண்டும் என தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com