உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி போட்டியில்லை

உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி போட்டியில்லை


சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலும் அடங்கும்.

சென்னைக்கான வேட்பாளர்  பட்டியலில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் அவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதே சமயம், மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மேயர் கார்த்திகாயினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சேலம் மேயர் சவுண்டப்பன் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

சென்னை மாநகராட்சியின் 78வது வார்டில் பாலகங்கா போட்டியிடுகிறார். திருச்சியில் சாருபாலா தொண்டைமானுக்கு 44வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மேயராக இருக்கும் ஜெயா, 41வது வார்டில் மீண்டும் போட்டியிடுகிறார்.
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com