காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துங்கள்: தமிழக அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக அரசின் தலைமைச் செயலர் அரவிந்த் ஜாதவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் கடிதம் எழுதியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கடிதத்தில், "காவிரி நதியில் இருந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தண்ணீர் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பின் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு
கிறது.
அரசுப்பூர்வமாக அணுகல்: தமிழகத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தும், தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதால் பிரச்னையை அரசுப்பூர்வமாக அணுகும் வகையில்
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரச்னை என்ன? தில்லியில் செப். 19-இல் கூடிய காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் செப்டம்பர் 21 முதல் 10 நாள்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து திறந்து விடும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் மனுவை விசாரித்தை உச்ச நீதிமன்றம், 21-ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கர்நாடகம் இதுவரை செயல்படுத்தாமல், அமைச்சரவைக் கூட்டத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கர்நாடக சட்டப் பேரவையின் மேலவைக் கூட்டத்தில், காவிரி நீரை மாநிலத்தின் குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு நீர் தர இயலாது என கர்நாடகம் கைவிரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com