ஜெயங்கொண்டம் சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவித்தார்

ஜெயங்கொண்டம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் சாலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதியுதவி அறிவித்தார்


சென்னை: ஜெயங்கொண்டம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிட்பபில்,  அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா, கச்சிப்பெருமாள் என்ற இடத்தில் 25ம் தேதி அன்று லாரியும், வேனும் மோதிய விபத்தில், வேனில் பயணம் செய்த கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜகுமாரி, மாசிலாமணி மனைவி முனியம்மாள், ராமச்சந்திரன் மகன் மருது பாண்டியன், ராஜேந்திரன் மனைவி காசியம்மாள், பஞ்சநாதன் மனைவி காமாட்சி, சின்னப்பன் மகன் மணிகண்டன், முருகையன்  மனைவி ராணி, சேட்டு மனைவி சித்ரா, நடராஜன் மனைவி செந்தாமரை, ராஜமாணிக்கம் மனைவி சரஸ்வதி, தங்கதுரை மனைவி செல்வி, செல்வராசு மனைவி அன்னமயில், சாமிநாதன் மனைவி வளர்மதி மற்றும் அன்பழகன் மனைவி வாசுகி ஆகிய 14 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியும், இந்த சாலை விபத்தில் 11 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் துயரம் அடைந்தார்.

இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிருவாகத்திற்கும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/­ ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/­ ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com