இரு சக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு உரிமம் தரக்கூடாது: பா.ம.க

புதுச்சேரி மாநிலத்தில் இரு சக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு உரிமம் தரக்கூடாது என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இரு சக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு உரிமம் தரக்கூடாது என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

அதன் மாநில செயலாளர் ஜெ.கோபி வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலானோர் ஆட்டோக்களில் சவாரி செய்கின்றனர்.

ஆனால் புதுச்சேரியில் ஓடும்  பெரும்பாலான ஆட்டோக்கள் பர்மிட் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமலும் என்ஓசி வாங்காமலும் கேரளா,கர்நாடக போன்ற மற்ற மாநிலத்தில் இருந்து ஆட்டோக்களை கொண்டுவந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் விபத்து நேரிடும் போது   இன்சூரன்ஸ் (காப்பீ ட்டுத்தொகை) இழப்பீடு பெறமுடியாமல் ஆட்டோ ஓட்டுநர்களும்,பயணிப்பவர்களும் மிகவும் பாதிப்படைகின்றனர்.

இந்த விவகாரத்தில் மாநில போக்குவரத்து துறை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் 40 ரூபாய் எனவும் கிலோ மீட்டர் ஒன்றிற்கு 20 ரூபாய் நிர்ணயிக்க கோரியும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டும் அண்டை மாநிலங்களில் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்தும் பொதுமக்கள் பயனடையும் வகையிலும்,அதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டும் கட்டணத்தை முறைபடுத்த வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள சிஐடியூ,ஏஐடியூசி போன்ற ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதே தொழிற்சங்கங்கள் கேரளாவில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தையே வசூலித்து வருகிறது. எனவே புதுச்சேரியிலும் இந்த ஆட்டோ தொழிற்சங்கங்கள் குறைந்த பட்ச கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்ககூடிய இருசக்கர வாகன வாடகை நிலையத்திற்கான உரிமத்தை அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் .
மேலும் பெங்களுரில் உள்ளது போன்று சுற்றுலாப்பயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு பிரீ பைடு ஆட்டோ கட்டண திட்டத்தை புதுச்சேரியிலும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com