ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவர்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது, தங்கள் தரப்பு மருத்துவரையும் உடன் இருக்க அனுமதி கோரி தந்தை பரமசிவம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ராம்குமார் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவர்: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்


புது தில்லி : ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது, தங்கள் தரப்பு மருத்துவரையும் உடன் இருக்க அனுமதி கோரி தந்தை பரமசிவம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம், பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த நிலையில், பரமசிவத்தின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனியார் மருத்துவரை சேர்க்கக் கோரியிருந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com