உள்ளாட்சித் தேர்தல்: தமாகா முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான தமாகாவின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தமாகாவின் முதல் வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தமாகாவின் முதல் வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான தமாகாவின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டு ஜி.கே.வாசன் கூறியது:
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே, ஆளுங்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் தேர்தலை நடத்தும் என நம்புகிறேன்.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்துச் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
முதல் பட்டியல்: முதல் வேட்பாளர் பட்டியலில் மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை 64 வார்டுகள், மதுரை 10 வார்டுகள், கோவை 8 வார்டுகள், திருச்சி 6 வார்டுகள், ஈரோடு 20 வார்டுகள், சேலம் 4 வார்டுகள், திருப்பூர் 40 வார்டுகள், தூத்துக்குடி 5 வார்டுகள், தஞ்சை 7 வார்டுகள், திண்டுக்கல் 5 வார்டுகள் என 10 மாநகராட்சிகளில் 169 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com