திமுகவுடன் கூட்டணியா? திருமாவளவன் மறுப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிடுவதாகவும், திமுக கூட்டணியில் இடம்பெறவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக வந்த செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து, சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துதான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். இதன்படி, மாவட்டம் வாரியாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. எங்கள் அணி, திருவாரூர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), தஞ்சாவூர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கடலூர் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகிய இடங்களில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக செய்திகள் வெளிவருவது அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com