உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்!

வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாது என்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் ...
உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்!

சென்னை: வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாது என்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிய ஏற்பாடுகளை நிறைவு செய்து வருமே மாதம் 14-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதன் தனிச் செயலாளர் ராஜசேகர் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் 'தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை,எனவே நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தபடி வருமே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேத்தல்களை நடத்த முடியாது.  எனவே கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்'  என்று கோரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com