சிறைக் கைதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆதார் கட்டாயம்; சசிகலாவுக்கும்!

பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறைத் துறை நிர்வாகம் பின்பற்றத் தொடங்கி விட்டது.
சிறைக் கைதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆதார் கட்டாயம்; சசிகலாவுக்கும்!

புது தில்லி: சிறையில் இருக்கும் கைதிகளுக்கும், அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை பின்பற்றுமாறு அனைத்து சிறைத் துறை நிர்வாகத்துக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், இந்தியா முழுவதும் சிறைகளில் உள்ள சுமார் 4 லட்சம் கைதிகளும் ஆதார் அட்டை எனும் வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

மத்திய உள் விவகாரத் துறை இணைச் செயலர் திலீப் குமார், மாநில அரசுகளுக்கும், மத்திய சிறைத் துறை நிர்வாகங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 109 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் குடிமக்கள் எண்ணிக்கையில் 99சதவீதமாகும். எனவே, சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது, வாக்குமூலம் பதிவு செய்தல், பரோல், இலவச சட்ட உதவி, சிறைக்குத் திரும்புதல், போக்குவரத்து, சுகாதார வசதிகள், சிறையில் இருந்து விடுதலை செய்தல் போன்ற அனைத்தும் ஆதார் அட்ட் எண்ணுடன் சேர்த்து நெறிபடுத்த வேண்டும் என்று அந்த கடிதம் ஆரம்பிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணப் பதிவு 2015ன் புள்ளிவிவரப்படி, இந்தியா முழுவதும் உள்ள 1,401 சிறைகளில் சுமார்  4 லட்சத்து 19 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மற்றும் யூனியன் அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய மற்றொரு அறிக்கையில், சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க வருவோருக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறைத் துறை நிர்வாகம் பின்பற்றத் தொடங்கி விட்டது. சிறைக் கைதிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால், அதிமுக பொதுச் செயலர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைப் பார்க்கப் போகும் நபர்கள் ஆதாரை நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என்பது கூடுதல் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com