நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை : கிரண்பேடி

புதுச்சேரி அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவது போல் நான் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க மாட்டேன் என புதுச்சேரி துணைநிலை
நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை : கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவது போல் நான் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க மாட்டேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், ஆட்சியாளர்களுக்கும் முட்டுக்கட்டையாகச் செயல்படும் ஆளுநர் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமன்றி, யூனியன் பிரதேச அரசுக்கும் பொருந்தும். எனவே, புதுவை மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், எம்.எல்.ஏக்களும் தில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் துணைநிலை ஆளுநரின் அரசியல், சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு மாறான செயல்பாடுகளைப் பற்றி முறையிட்டு விளக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக கிரண்பேடி தனது டுவிட்டர் பக்க பதிவில், புதுச்சேரி அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும் நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். வளர்ச்சியையும் மாற்றத்தையும் விரும்பாதவர்கள் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com