புதிய நடைமுறை: சென்னை மாநகரப் பூங்காவுக்குள் நுழைய காதலர்களுக்குத் தடை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்கா ஒன்றின் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகம் அதிர்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய நடைமுறை: சென்னை மாநகரப் பூங்காவுக்குள் நுழைய காதலர்களுக்குத் தடை!

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்கா ஒன்றின் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகம் அதிர்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவின் நுழைவு வாயிலில், மாணவ, மாணவியர்கள், காதலர்கள் பூங்காவுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா திறந்திருக்கும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையுடனேயே இந்த அறிவிப்பும், தமிழக அரசின் முத்திரையுடன் வெளியாகியுள்ளது.

இதனால், பூங்காவுக்குள் காதலர்களின் தொல்லைகள் இருக்காது என்றாலும், கொளுத்தும் கோடை வெயிலில், படிக்க மட்டும் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து தமிழ் நாளிதழ் ஒன்று, பூங்கா காவலாளியிடம் கேட்டதற்கு, பூங்காவுக்குள் சில காதல் ஜோடிகள் விரும்பத் தகாத செயல்களில் ஈடுபடுவதும், தற்கொலைக்கு முயல்வதும் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com