எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் 45 நாட்கள்: கேள்விக்குறியான வேலூர் இளைஞனின் எதிர்காலம்

சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 45 நாட்கள் வைக்கப்பட்டதால், அவனது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் 45 நாட்கள்: கேள்விக்குறியான வேலூர் இளைஞனின் எதிர்காலம்


வேலூர்: சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 45 நாட்கள் வைக்கப்பட்டதால், அவனது எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

நேதாஜி சந்தையில் காய்கறிகளை லாரியில் இருந்து இறக்கும் கூலி வேலை செய்து வந்த அருணாச்சலம் என்ற இளைஞன், கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவுப் பணி முடிந்து பகாயத்தில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, காவலர்களால் சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தான் பணியாற்றி வந்த இடத்துக்கு அழைத்துச் சென்றும், தன்னைப் பற்றி கூறியும், காவலர்கள் தன்னை விடுதலை செய்யாமல், சிறையில் அடைத்ததாகவும், இதுவரை தான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறார் அருணாசலம்.

தன்னுடன் மேலும் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது பரோல் நீட்டிக்கப்படாமேலேயே அவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஆனந்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் நடத்திய திடீர் ஆய்வின் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உடனடியாக, அந்த சிறுவனை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எந்த குற்றமும் செய்யாமல் 45 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞனின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com