ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? சுப்பிரமணிய சுவாமி விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? சுப்பிரமணிய சுவாமி விளக்கம்

கோவை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
 கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமான மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது. திமுக-வை தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். திமுக வெற்றி பெறக் கூடாது. காரணம் முந்தைய ஆட்சிக் காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு மத்திய அரசு காரணம் கிடையாது.
 நிறவெறி தொடர்பாக தருண்விஜய் கூறிய கருத்து ஏற்க முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒரே டி.என்.ஏ. கொண்டவர்கள். இதில் வேறுபாடு கிடையாது.
 தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக எம்.பி-க்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
 ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் இந்திய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com