ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: சுப்பிரமணியன் சுவாமி

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது
ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: சுப்பிரமணியன் சுவாமி

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

அதிமுக சசிகலா அணி வேட்பாளர், அதாவது அதிமுக (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ரூ.89 கோடி வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்துள்ளது என வருமான வரித்துறையால், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள  2.6 லட்சம் வாக்காளர்களில் 85 சதவீதம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடி ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தீவிர ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்படுவதாக அஅதிகாரப்பூர்வமான அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, உதிரி தாள்களை ஆதாரமாக வைத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது. திமுக-வை தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். திமுக வெற்றி பெறக் கூடாது. காரணம் முந்தைய ஆட்சிக் காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நேற்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com