சாலைகளில் ஏற்படும் பள்ளம் இயற்கையானது அல்ல: நிபுணர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் அவ்வப்போது சாலைகளில் பள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியமும், முக்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டுவிடுவதுமே காரணம் என்று புவி ஆராய்ச்சியாளர்களும், சுரங்கப் பணி நிபுணர்களும் கூறுகிறார்.
சாலைகளில் ஏற்படும் பள்ளம் இயற்கையானது அல்ல: நிபுணர்கள் குற்றச்சாட்டு


சென்னை: சென்னையில் அவ்வப்போது சாலைகளில் பள்ளம் ஏற்படுவதற்கு அலட்சியமும், முக்கிய விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டுவிடுவதுமே காரணம் என்று புவி ஆராய்ச்சியாளர்களும், சுரங்கப் பணி நிபுணர்களும் கூறுகிறார்.

சர்வதேச புவியறிவியல் மேம்பாட்டு கழகத்தைச் சேர்ந்த புவியறிவியலாளர் எல். இளங்கோ, சென்னையின் புவியமைப்பில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களே இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படக் காரணம் என்று கூறப்படுவதை முற்றிலும் மறுத்துள்ளார்.

அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கு சுமார் 3 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தின் மேற்புறச் சுவர்களுக்கு மேலே இருக்கும் மணற்பரப்பை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதற்கான கொள்கைகள் முழுவதுமாக பின்பற்றாததே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கக் காரணமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலையில் ஏற்பட்ட பள்ளம், கடந்த 2 வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். இதே போல மேலும் சில பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் பெருநகரங்களில் இதுபோன்று பள்ளம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்றாலும், சென்னையில் இது அடிக்கடி நிகழ்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்துவதில் இருந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு,  அது முழுக்க பாதுகாப்பான்து என்பதை உறுதி செய்த பிறகு திறந்துவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும், இனியாவது, சுரங்கம் அமைக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து, இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் சிமெண்ட் கலவையைக் கொட்டி நிரப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் அண்ணாசாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம், மெட்ரோ சுரங்கப் பாதை ஊழியர்களால் மூடப்பட்டு, இன்று போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. முதற்கட்டமாக இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com