தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார்  

வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.  
தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார்  

சென்னை: வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மீது வருமான வரித்துறையினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.  

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் வீடுகள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் இருவரும் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரமும் வாக்குவாதம் செய்தார்.

அப்பொழுது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வருமான வரித்துறையின் பெண் அதிகாரியை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காவல்துறை ஆணையரிடம் வருமானவரித்துறை புலானய்வுத்துறை தலைவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மேலிடப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகிய மூவர் மீதும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் புகார் அளிக்கபப்ட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com