பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி: விளக்கமளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் அருகே மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியின்  கன்னத்தில் கூடுதல்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

திருப்பூர் அருகே மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியின்  கன்னத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அறைந்தது குறித்து விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது.

அதற்குப் பதிலாக, சாமளாபுரம், நான்கு சாலை சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய மதுக் கடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. அந்த மதுக் கடையை மூடக் கோரி, சாமளாபுரம் பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திருச்சி - கோவை, சேலம்- கொச்சி தேசிய நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்கலம் போலீஸார் சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியல் தொடர்ந்தது.

அதைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கூடுதலாக ஆயுதப்படையினரும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவினரும் குவிக்கப்பட்டனர்.
பொது மக்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்தத் தடியடியால் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷுக்கு மண்டை உடைந்தது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியின் கன்னத்தில், கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தாக்கியதில் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

போலீஸாரின் கண்மூடித்தனமான தடியடியைக் கண்டித்து, சாமளாபுரம் பகுதியில் ஈஸ்வரன் கோயில் அருகே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினர்.

மேலும், இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸாரின் கண்மூடித்தனமான செயலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துடன் மன்னிப்புகோர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஏடிஎஸ்பி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஏடிஎஸ்பியை பதவிநீக்கம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கக்கோரி தமிழக டிஜிபி, தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யும் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com