தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம்

தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம்


சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும்.

தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

வரும் மே மாதத்தில் கோடை மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று தமிழகத்தைப் பொருத்தவரை பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை, நாமக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, தருமபுரியில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com