ரேஷன் கடை: சொல்லப்போற விஷயம் புதிதல்ல... விடியோ மட்டுமே புதிது

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் அனைவருக்குமே ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருக்கும். அதுதான் அரிசி, சர்க்கரை, பருப்புகளின் எடை குறைபாடு.
ரேஷன் கடை: சொல்லப்போற விஷயம் புதிதல்ல... விடியோ மட்டுமே புதிது


ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் அனைவருக்குமே ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருக்கும். அதுதான் அரிசி, சர்க்கரை, பருப்புகளின் எடை குறைபாடு.

ஒரு கிலோ சர்க்கரையில் குறைந்தது கால்கிலோ சர்க்கரை கசந்திருக்கும், 10 கிலோ அரிசி என்றால் குறைந்தது 2 கிலோ அரிசி ஆவியாகியிருக்கும். இது எழுதப்படாத சட்டமாக மாறி நாமும் நாளடைவில் ஏற்றுக் கொண்டே விட்டோம்.

அந்நியன், முதல்வன், ரமணா படங்களைப் பார்த்தாலும் கூட, இதுபோன்ற இடங்களில் தட்டிக் கேட்க ஏனோ நமக்குத் தோன்றுவதில்லை. மாதாமாதம் இங்கு வந்து தானே நிற்க வேண்டும் என்ற நிலையும், தேவையில்லாத வம்பு எதற்கு என்ற உள்மனக் கேள்வியுமே இதற்குக் காரணம்.

நமது மௌனத்தை சம்மதமாக ஏற்றுக் கொண்ட ரேஷன் கடை ஊழியர்களும் ஏகத்துக்கு எடை குறிப்பில் ஈடுபடுகிறார்கள்.

'கண்ணெதிரேத்தான் போடுறான், எப்படி குறையுதுன்னு' வரும் வழியெல்லாம் புலம்பும் நபர்களும், இதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று நினைக்கும் பாமரர்களும் இருக்கத்தானே செய்கிறோம்.

 

இந்த நிலையில்தான், கோவையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் மிகவும் சாமர்த்தியமாகவும் அதே சமயம் அடிப்படை கருணை உள்ளத்தோடு ஊழியர் ஒருவர் எடைக் குறைப்பில் ஈடுபடும் விடியோ காட்சிகள் சமூக தளத்தில் வெளியாகியுள்ளது.

இது சமூக தளத்திலேயே பலரால் பகிரப்பட்டுவிட்டது என்றாலும், விடுபட்டவர்களும், குறைபட்டுக் கொள்பவர்களும் பார்த்து பயன்பெற வேண்டி இங்கே பகிர்ந்துள்ளோம்.

அரிசியை எடை போடும் போது கால் கிலோ எடைக் கல்லையும், சர்க்கரையை எடை போடும் போது மனசாட்சியோடு 50 அல்லது 100 கிராம் எடைக் கல்லையும் வைத்து தனது வேலையை செவ்வனே செய்யும் விடியோ தான் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com