ஜூன் மாதம் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் தகவல்

புதுவையில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வரும் ஜூன் மாதம் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் தகவல்

புதுவையில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வரும் ஜூன் மாதம் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மின்னணு தொழிற்பூங்கா தொடங்குவது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையில் தொழிற்சாலைகளை அமைத்து, வேலைவாய்ப்புகளை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புதிய தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஏற்கெனவே மேட்டுப்பாளையத்தில் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை.

தமிழகம் , கர்நாடக  பகுதியில் இருந்து  பல்வேறு தொழில் நிறுவனங்கள் , தொழில் அதிபர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்யும்.

காலாப்பட்டில் மின்னணு தொழிற்நுட்பப் பூங்கா
காலப்பட்டு பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பில் ரூ.10 கோடியில் மத்திய மிண்ண்னு தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுளளது.

ஜூனில் தொழில் முதலீட்டாளர் மாநாடு
தொழில் முதலிட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஜூன் மாதம் சென்னையில் 2 நாட்கள்  தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். மேலும்  ரூ.500 கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்க 6 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மின்னணு உபகரணங்கள், உதிரி பாகங்கள் என உற்பத்தி பிரிவுகள் தொடங்குவதால் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 6 பேர்களில் 5 பேர்களுக்கு அதில் எந்தவித சம்பந்தமும் இல்லை.
அவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது.

அதன்படி அவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துளளார். நானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளேன் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com