தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் நாராயணசாமி:
சித்திரை மாதம் 1-ம் நாள் முதல் ஏவிளம்பி ஆண்டு தமிழர்களின் புத்தாண்டாக மலர்ந்துள்ளது. இப்புத்தாண்டு தடைகளைத் தகர்த்து புதுவை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும். சித்திரைத் திருநாள் தமிழர் திருநாள். இதில் அனைவரும் தங்கள் உறவினர்களோடு கொண்டாடுவர்.

இந்நாளை விஷுத் திருநாளாகக் கொண்டாடும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டு அனைவரது வாழ்விலும், வளத்தையும், அமைதியையும், முன்னேறத்தையும் கொண்டு வரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

வருவாய் அமைச்சர் எப்.ஷாஜஹான்:
உலகில் தோன்றிய முதல் மொழி நமது செம்மொழியான தமிழ்மொழி என உலக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்ப்பதாகும். பண்டைய தமிழர்களின் வீரம், நாகரீகம், அறிவியல் திறமை போன்றவற்றுக்கு பல சான்றுகள் உள்ளன. இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு தமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதாக அமையட்டும். 

நலத்துறை அமைச்சர் கந்தசாமி:
நமது மாநிலம் தற்போது முன்னேற்றத்துக்காக எடுத்து வரும் பல முயற்சிகளில் ஆங்காங்கே தடைக்கற்களாக எதிர்ப்படும் பிரச்னைகளை சமாளிக்குமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் தமிழ் மக்களின் உள்ளங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வரும் தமிழ்ப்புத்தாண்டை நாம் அனைவரும் அனைத்து மத, இன பிராந்திய மக்களுடன் பகிர்ந்து கொண்டாடுவோம். தமிழ்ப் புத்தாண்டை ஒற்றுமை விழாவாக கொண்டாட வாழ்த்துகிறேன்.

ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.
கலாச்சார, பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்களின் புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் நீக்கி இன்பங்களை வாரி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். மலர்கின்ற தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக உதயமாக வேண்டும். 

கடந்த ஆண்டில் நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கட்டிக்காக்க ஒன்று கூடி வெற்றிபெற்றோம். அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மறந்து புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடக் கூடிய நல்ல சூழலை இந்த புத்தாண்டு நமக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை ஒளியை நெஞ்சில் ஏந்துவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com