மாருதா புயல் கரையை கடந்தது: புதுச்சேரி துறைமுகத்தில் புயல் கூண்டு இறக்கம்

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை

புதுச்சேரி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பாக 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மேலும் வலுப்பெற்று, புயலாக உருவாகியுள்ளது.

"மாருதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மியான்மர் நோக்கி நகர்வதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதைக் குறிக்கும் வகையில் புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாருதா புயல் கரையை கடந்ததால் எச்சரிக்கை விலக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு இறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com