'வெள்ளை வெளிச்சம்' வள்ளலார் குறித்து நாளை பேசுகிறார் கவிஞர் வைரமுத்து

அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து 'வெள்ளை வெளிச்சம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கோவையில் புதன்கிழமை (ஏப்ரல் 19) உரையாற்றுகிறார்.

அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் குறித்து 'வெள்ளை வெளிச்சம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கோவையில் புதன்கிழமை (ஏப்ரல் 19) உரையாற்றுகிறார்.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் என்ற தலைப்பில் பாரதி, கம்பர், வள்ளுவர் உள்ளிட்டோர் குறித்து கவிஞர் வைரமுத்து ஏற்கெனவே உரையாற்றியுள்ளார். தினமணியின் தலையங்கப் பக்கத்தில் அவரின் உரைகள், அவர் உரையாற்றியதற்கு மறுநாள் வெளியிடப்பட்டு வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ- அரங்கில் தினமணி சார்பில் ஏப்ரல் 19-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், வள்ளலார் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றுகிறார். நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட இலக்கிய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக அன்பர்கள், தினமணி வாசகர்கள், கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொள்ளுமாறு தினமணி நாளிதழ் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. அனுமதி இலவசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com