அரசு கேபிள் கட்டணத்தைசெலுத்த வந்தாச்சு புதிய மொபைல் ஆப்!

தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்துள்ளார்.
அரசு கேபிள் கட்டணத்தைசெலுத்த வந்தாச்சு புதிய மொபைல் ஆப்!

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசானது அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்னும் அமைப்பின் வழியாக கேபிள் டி.வி.சேவையை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது தமிழக அரசின் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்துள்ளார். இதன்படி கேபிள் சந்தாதாரராகள் ஒன்று முதல் பத்தாம் தேதிக்குள் இந்த மொபைல் ஆப்பின் வழியாக கேபிள் கட்டணத்தை செலுத்தலாம். அதற்குப்பிறகு என்றால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம்.

பொதுமக்கள் செலுத்தும் 70 ரூபாயில் 20 ருபாய் தமிழக அரசின் கணக்கிலும், 50 ரூபாய் கேபிள் ஆப்ரேட்டர்களின் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com