நெல்லை: தாமிரவருணியை பாதுகாக்கக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆற்றங்கரையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை: தாமிரவருணியை பாதுகாக்கக் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆற்றங்கரையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தாமிரவருணி நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தி ஆகி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இந்நதியின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. தென்மாவட்ட மக்களின் ஜீவதாரமாக திகழ்ந்து வரும் தாமிரவருணி நதியில் சராசரியாக பற்றாக்குறை நிலவி வருகிறது.

தாமிரவருணி வடிநிலப் பகுதியில் நிலத்தடி நீர் இருப்பாக 26,278 மில்லியன் கனஅடி,  மழையின் மூலம் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து 48,563 மில்லியன் கனஅடியும் சேர்த்து மொத்தம் 74,843 மில்லியன் கனஅடி கிடைக்கிறது. 

பாசனம், குடிநீர், கால்நடை, தொழிற்சாலைகள் தேவையை பூர்த்தி செய்ய 22,180 மில்லியன் கனஅடி பற்றாக்குறையாக இருந்து வருவதாக பொதுப்பணித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை இல்லாததால் தற்போது கடும் வறட்சி எழுந்துள்ள சூழலில் தாமிரவருணி நதியில் இருந்து உபரிநீரைத்தான் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஆற்றங்கரையில் 24 மணி நேர பட்டினிப் போராட்டத்தை நள்ளிரவில் தொடங்கினர்.

போராட்டத்துக்கு அனுமதியில்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணிமாவீரன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு உள்ளிட்ட 6 பேரை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com